ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீரின் தரத்தைப் பரிசோதிக்கும் புதிய கருவி கண்டுபிடிப்புப் போட்டி: தேசிய ஜல் ஜீவன் திட்டம் தொடக்கம்
Posted On:
25 DEC 2020 2:05PM by PIB Chennai
குடிநீரின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக, பிற இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய புதிய கருவியை உருவாக்கும் சவால் போட்டியை தேசிய ஜல்ஜீவன் திட்டம் தொடங்கியுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தண்ணீர் பெறும் மக்களுக்கு, அவற்றின் தரத்தைப் பரிசோதிக்கும் வசதி இல்லை. இதனால் குழாயில் இருந்து வரும் தண்ணீரை, நேரடியாக குடிக்க மக்கள் தயங்குகின்றனர்.
நகரப்பகுதிகளில் உள்ள மக்கள் நீர் சுத்திகரிப்புக்காக கூடுதலாகச் செலவு செய்கின்றனர். இதனால், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, குடிநீரின் தரத்தைப் பரிசோதிக்கும் புதுமையான கருவியை உருவாக்கும் போட்டியை தேசிய ஜல் ஜீவன் இயக்கம், தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையுடன் இணைந்து நடத்த முடிவு செய்துள்ளது. எளிதாக பிற இடங்களுக்கு எடுத்து செல்லும் வகையிலும், விலை குறைவானதாகவும் இது இருக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்:
http://bit.ly/37JpBHv
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683568
------
(Release ID: 1683608)
Visitor Counter : 228