மத்திய அமைச்சரவை

இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையே திருத்தியமைக்கப்பட்ட விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 DEC 2020 4:44PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா - பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே திருத்தியமைக்கப்பட்ட விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது.

திருத்தி அமைக்கப்பட்ட விமானச் சேவைகள் ஒப்பந்தம் இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்துக்கு இடையேயான முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்தியா பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே சீரான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தவும், இருதரப்பினருக்கும் வணிகரீதியான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். மேலும் இரு நாடுகளின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரங்களை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682973

*****************


(Release ID: 1683002)