அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சர்வதேச அறிவியல் இலக்கியத் திருவிழா – விக்யானிகா - சீனிவாச ராமானுஜனின் பிறந்ந நாளை குறிக்கும் வகையில் நடத்தப்பட்டது


பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் மாநாடு, ஆரோக்கிய மாநாடு, தத்துவம் மற்றும் அறிவியல், தொழில்துறை மற்றும் கல்வித்துறை மாநாடு ஆகியவற்றில் ஏராளமானோர் பங்கேற்பு

Posted On: 23 DEC 2020 11:19AM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் (ஐஐஎஸ்எப் 2020) முதல் நாளில் சீனிவாச ராமானுஜனின் பிறந்ந நாளைக் குறிக்கும் வகையில்விஞ்ஞானிகா ’  என்ற தலைப்பில் சர்வதேச அறிவியல் இலக்கியத் திருவிழாவைஅறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) - தேசிய அறிவியல் தகவல் மையம் (நிஸ்கேர்), புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவை கூட்டாக இணைந்து காணொலிக் காட்சி மூலம் நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்ஐஆர்-நிஸ்கேர் இயக்குநர் டாக்டர். ரஞ்சனா அகர்வால், ‘‘விஞ்ஞானத்தையும், இலக்கியங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதும், தன்னம்பிக்கையையும், உலகளாவிய நலனையும் மேம்படுத்துவதற்காக அறிவியல் தகவல் தொடர்புகளின் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான உத்திகளைக் காண்பிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்’’ என குறிப்பிட்டார்இந்த நிகழ்ச்சியல் முதன்மை உரையாற்றிய, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவர் டாக்டர். சேகர் சி.மாண்டே , ‘‘விஞ்ஞானிகா நிகழ்ச்சி மூலம் அறிவியல் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உற்சாகம் அளிக்கிறது’’ என்றார்தற்போதைய கோவிட் - 19 போராட்டத்தில் அறிவியல் தகவலின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

 இந்த நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர். அசுதோஷ் சர்மா, விஞ்ஞானத்தின் உலகளாவிய தன்மையை அதிகரிக்க இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விஞ்ஞானிகா நிகழ்ச்சி மூலம் விஞ்ஞானிகளுக்கும், பொது மக்களுக்கும் அறிவியல் தகவல் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஞ்ஞான பாரதி தலைவர் டாக்டர்  விஜய் பி.பட்கர், ‘‘இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால், உள்ளூர் மொழிகளை தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைப்பது அவசியம்’’ என குறிப்பிட்டார்.

 ‘இந்திய மொழிகளில் அறிவியல் இலக்கியம்என்ற தலைப்பிலான கூட்டமும்  அறிவியல் திரைப்படத் தயாரிப்பாளர் திரு. நந்தன் குத்யாதி தலைமையில் நடத்தப்பட்டது.   விஞ்ஞானத் தகவல் தொடர்புகளில் அறிவியல் புனை கதையின் முக்கியத்துவம் மற்றும் மண்டல மொழிகளில் அறிவியலைப் பிரபலப்படுத்த அறிவியல் தொடர்பாளர்களின் ஆர்வம் குறித்து அவர் பேசினார்.

விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி டாக்டர். டி.வி.வெங்கடேஸ்வரன்அறிவியலை தமிழில் தெரிவித்ததில் பல்வேறு ஊடகங்களின் பங்கு குறித்து விளக்கினார். தமிழ் இலக்கிய வரலாற்றில் வெவ்வேறு அறிவியல் புனைகதைகளைப் பற்றி அவர் பேசினார்.

பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர் மாநாட்டில்’  சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் திருமதி. ஸ்ம்ரிதி  இரானி கலந்து கொண்டார். இதில் தலைமை விருந்தினராக தெலங்கானா ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

ஆரோக்கிய மாநாட்டில்’  மனிதர்களின் சுகாதாரம் மற்றும் உடல் நலம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுஇதில் ஆயுஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆயுஷ்  செயலாளர் திரு. ராஜேஷ் கொடேச்சா முக்கிய உரை நிகழ்த்தினார்.

உடல் நலத்துக்கான சமயலறை மருந்தகம், வீடியோ போட்டி, யோகாவின் மகிழ்ச்சி, யோகாசனப் போட்டி, கவி சம்மேளனம், விரைவில் குணமடையுங்கள் போன்ற சுவாரஸ்யமான  நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டனகுழு விவாதங்களும் நடந்தன.

தத்துவம் மற்றும் அறிவியல் நிகழ்ச்சியில் டாக்டர்.சுஜித் பட்டாச்சார்யா துவக்கவுரை நிழ்த்தினார்.

இந்திய அறிவியலின் வரலாறுஎன்ற நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் திரு. ஆரிப் முகமது கான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இதில்பண்டைய இந்திய அறிவியல்என்ற தலைப்பில் மும்பை ஐஐடி இயற்பியல் துறை பேராசிரியர் பி.என். ஜக்தப் உரையாற்றினார்.

தண்ணீர்என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜல்சக்தி அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாணவர்களின் அறிவியல் கிராமம்என்ற நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர். இதில் அறிவியல் உரைகளும், எளிமையான செய்முறை விளக்க நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தொழில்துறை மற்றும் கல்வித்துறை சிறப்பு இணையக் கருத்தரங்கமும்  நடத்தப்பட்டது. இதில் டாக்டர். சிப்நாத் மைத்தி கண்டுபிடித்த சூரிய மற்றும் காற்று மின்சக்தியில் இயங்கும் கருவிகள் குறித்து பேசப்பட்டது.

இது போல் ஏராளமான நிகழ்ச்சிகள், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முதல் நாளில் நடந்தன. இதில் ஏராளமானோர் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த 4 நாள் அறிவியல் திருவிழா நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682890

 

*****************



(Release ID: 1682960) Visitor Counter : 205