இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
22 DEC 2020 6:42PM by PIB Chennai
உடல் வலிமை மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அறைகூவலை வலுப்படுத்தும் விதத்தில், உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு நாட்டு மக்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமது உடற்பயிற்சி காணொளியை 2020 டிசம்பர் 22 அன்று சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரு ரிஜிஜூ, மக்களையும் அவ்வாறு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
"புதிய இந்தியாவை உடல் வலிமை மிக்க இந்தியாவாக மாற்றுவதற்கான பிரதமரின் லட்சியத்தில் பல லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். ஃபிட் இந்தியா இயக்கத்தை நாமும் வலுப்படுத்துவோம்," என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் மேலும் பதிவிட்டுள்ள அவர், "உங்களுடைய உடற்பயிற்சி காணொலிகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் இணைந்து உடல் வலிமை மிகுந்த ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவோம்," என்று கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்கள் அனைவருக்கும் விடுத்த அழைப்பு சர்வதேச சுகாதார நிறுவனத்தின் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682735
------
(रिलीज़ आईडी: 1682821)
आगंतुक पटल : 164