நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2020-ஆம் ஆண்டுக்கான நுகர்வோர் விவகாரங்கள் துறையின் முக்கிய நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
21 DEC 2020 12:38PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, 2020- ஆம் ஆண்டு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி:
நுகர்வோர் பாதுகாப்பு:
• நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கு மாற்றாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2020 அமல்படுத்தப்பட்டது.
• நுகர்வோர் உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் வாயிலாக முறையற்ற வர்த்தகம், போலியான விளம்பரங்கள் ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
• நுகர்வோர் பாதுகாப்பு (நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்) விதிமுறைகள் 2020-இன் 8-வது விதியின் கீழ் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில், நுகர்வோர் வழக்கு பதிவு செய்ய https://edaakhil.nic.in/ என்னும் இணையத்தளம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
கொவிட்-19 தொடர்பான முன்முயற்சிகள்:
• முகக் கவசங்கள், கை கழுவும் திரவம் ஆகியவை ஜூன் 30-ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
• கை கழுவும் திரவம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆல்கஹாலின் விலை முறைப்படுத்தப்பட்டது.
ஏழை மக்களின் உணவு மேம்பாட்டிற்கான பிரதமர் திட்டம்:
• கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏழைகளின் நலனுக்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரையில் வழங்கும் ஏழை மக்களின் உணவு மேம்பாட்டிற்கான பிரதமர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 18.3 கோடி குடும்பங்களுக்கு 5.48 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
• எனினும் ஜூன் மாதத்தில் இந்தத் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்சார்பு இந்தியா தொகுப்பு:
• தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அல்லது மாநில /யூனியன் பிரதேச அரசின் எந்தவொரு குடும்ப அட்டைகள் திட்டத்திலும் பயன்பெறாத புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளரின் குடும்பத்திற்கும் இரண்டு கிலோ முழு சன்னா வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 1.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு, 1.66 கோடி பயனாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682347
******
(Release ID: 1682347)
(रिलीज़ आईडी: 1682374)
आगंतुक पटल : 2066