பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
நாட்டின் எட்டாவது உற்பத்திப் படுகையான வங்காளப் படுகையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
प्रविष्टि तिथि:
20 DEC 2020 2:21PM by PIB Chennai
தற்சார்பு இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நாட்டின் எட்டாவது உற்பத்திப் படுகையான வங்காளப் படுகையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் இந்தப் படுகை முக்கியமான பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் மீதான சார்பு குறைக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பை இந்தப் படுகையின் மூலம் நிறைவேற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்தைப் பாராட்டிய அமைச்சர் கண்டுபிடிப்புகளின் மூலம் கடந்த 7 தசாப்தங்களாக பல்வேறு விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இந்தப் படுகையில் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் மேற்கு வங்காளத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் திரு. ஜ்யோதிர்மே சிங் மகாதோ, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான திரு சசி சங்கர் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682161
-----
(रिलीज़ आईडी: 1682202)
आगंतुक पटल : 306