பாதுகாப்பு அமைச்சகம்

டிஆர்டிஓ தயாரித்த மூன்று கருவிகளை, முப்படைத் தளபதிகளிடம் வழங்கினார் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 18 DEC 2020 5:02PM by PIB Chennai

ராணுவ  ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் தயாரித்த மூன்று கருவிகளை, முப்படைத் தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று வழங்கினார்.

ராணுவப் பயன்பாட்டுக்காக டிஆர்டிஓ தயாரித்த கருவிகள் மற்றும் ஏவுகணை ஒப்படைக்கும் நிகழ்ச்சி தில்லி டிஆர்டிஓ பவனில் இன்று நடந்தது.  இதில் இந்திய கடல்சார் கண்காணிப்புக் கருவியை (ஐஎம்எஸ்ஏஎஸ்)கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர்  சிங்கிடமும், அஸ்த்ரா எம்.கே-1 ரக ஏவுகணையை விமானப்படைத் தளபதி ரகேஷ் குமார் சிங் பதாரியாவிடமும், எல்லைக் கண்காணிப்புக் கருவியை (பாஸ்), தரைப்படைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானேவிடமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் விருதுகளும் வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681732

**********************

 

 

 

 

 



(Release ID: 1681775) Visitor Counter : 254