பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கடந்த ஆறேழு ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
18 DEC 2020 3:49PM by PIB Chennai
திரு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பின்பு, கடந்த ஆறேழு ஆண்டுகளில் நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் 95-வது அடிப்படை பாடப்பிரிவின் நிறைவு விழாவில் பேசிய மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறினார்.
கர்மயோகி இயக்கம் மற்றும் ஆரம்ப் போன்ற புதிய முன்னெடுப்புகள் மூலம் நல்லாட்சியை வழங்குவதற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் லட்சியம் வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார்.
லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் 95-வது அடிப்படை பாடப்பிரிவு குறித்து பேசிய அவர், கொரோனா என்னும் கடினமான காலகட்டத்தில் வழங்கப்பட்ட இந்தப் பயிற்சி அதன் உண்மையான நோக்கத்தை அடைந்ததுள்ளது என்றார்.
பயிற்சி பெற்ற 428 பேரில், 136 பேர், அதாவது ஏறத்தாழ 32 சதவீதம், பெண்கள் என்பது குறித்து டாக்டர். ஜிதேந்திர சிங் திருப்தி தெரிவித்தார். பயிற்சி பெற்றவர்களில் 245 நபர்கள் பொறியாளர்கள் என்பது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681720
******
(Release ID: 1681720)
(Release ID: 1681734)
Visitor Counter : 214