ஆயுஷ்

யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு அங்கீகரித்தது

Posted On: 17 DEC 2020 4:37PM by PIB Chennai

யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளன.

ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஸ்ரீபத் நாயக் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் புது தில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

நிருபர்களிடம் பேசிய திரு நாயக், யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு அங்கீகரித்து இருப்பதன் மூலம் அது இன்னும் மேம்பட்டு அதன் போட்டித் தன்மையை அதிகரித்து, உலகம் முழுக்க சென்றடையும் என்று கூறினார்.

கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக யோகாசனமும் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு ரிஜிஜூ கூறினார்.

 

நமது பாரம்பரியத்தில் பல நூற்றாண்டுகளாக யோகாசன போட்டிகள் நடந்து வந்திருப்பதாக திரு ஸ்ரீபத் நாயக் கூறினார். யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்க விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681441

**********************



(Release ID: 1681583) Visitor Counter : 210