பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டு பழங்குடியினரின் புதிய பொருட்களை டிரைப்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
16 DEC 2020 3:26PM by PIB Chennai
தனது பொருட்கலவையை கவர்ச்சிகரமானதாக ஆக்கி லட்சக்கணக்கான பழங்குடி தொழில்கள் பெரிய சந்தைகளை அடைவதை உறுதி செய்யும் நோக்கில் புதிய பொருட்களை டிரைப்ஸ் இந்தியா தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த வாரம், இருபது பயனுள்ள மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பொருட்கள் டிரைப்ஸ் இந்தியா வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. வனப் பசுமைப் பொருட்கள், இயற்கை பொருட்கள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் இதில் அடங்கும்.
தமிழகத்தின் இருளர்கள் மற்றும் குரும்பர்களின் 10 பொருட்களும் இந்த வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன. சீயக்காய் தூள், சிவப்பு அரிசி, ஜாதிக்காய், ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் இரு வகையிலான அவல் ஆகியவை இப்புதிய பொருட்களாகும்.
கடந்த சில வாரங்களில் மட்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் பல்வேறுப் பொருட்களை டிரைப்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் இயற்கை மற்றும் வன பசுமை பொருட்கள் வரிசையின் கீழ் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவை டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681047
*********
(रिलीज़ आईडी: 1681223)
आगंतुक पटल : 204