ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 278 லட்சம் வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 16 DEC 2020 3:43PM by PIB Chennai

2019 ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், 278 லட்சம் வீடுகளுக்கு இதுவரை குடிதண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

6.01 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் தற்போது குடிதண்ணீர் கிடைக்கிறது. நாட்டிலுள்ள 18 மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் தண்ணீர் இணைப்பை வழங்க மாநிலங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன. இத்திட்டத்தின் வளர்ச்சியைக் குறித்த விவரங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx) பார்க்கலாம்.

2024-ஆம் ஆண்டுக்குள்  நம் நாட்டின் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து பிரதமரால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும் செயல்படுத்தப்பட்ட காரணத்தால் ஆறு கோடிக்கும் அதிகமான வீடுகளை தற்போது எட்டியுள்ளது. 31 சதவீதத்துக்கும் அதிகமான ஊரக வீடுகளுக்கு இதுவரை குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681054

*************


(Release ID: 1681186) Visitor Counter : 158