பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

வடகிழக்குப் பிராந்திய மின்சார மேம்பாட்டுத் திட்டம்: திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 DEC 2020 3:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வடகிழக்குப் பிராந்திய மின்சார அமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களில் மின்சாரப் பகிர்மானமும், விநியோகமும் வலுவடையும்.

மேற்கண்ட ஆறு மாநிலங்களுடன் இணைந்து, மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான பவர்கிரிட் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரூ 6,700 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், மாநிலங்களுக்குள் மின்சாரப் பகிர்மானத்தையும், விநியோக அமைப்புகளையும் வலுப்படுத்துவதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681052

******

 (Release ID: 1681052)(Release ID: 1681081) Visitor Counter : 226