சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்

Posted On: 12 DEC 2020 4:34PM by PIB Chennai

பதினேழு மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களுக்கான ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டார்.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை தாங்கிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், சுகாதார சேவை வழங்கல் முறையை ஆயுஷ்மான் பாரத் திட்டம் முழுவதுமாக மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், செயல்பாட்டில் உள்ள 51,500-க்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் மூலம் 30 கோடிக்கும் அதிகமான நபர்கள் பயன்பெற்றிருப்பதாகக் கூறினார்.

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் 1.45 கோடிக்கும் அதிகமான கட்டணமில்லா சிகிச்சைகள் ஏழை மக்களுக்கு வழங்கபட்டிருப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே பாட்னாவில் இருந்து காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

சிறப்பாக சேவையாற்றியதற்காக 1153 ஆரம்ப சுகாதார சேவை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தரவுப்பலகை மற்றும் தொற்றா நோய்கள் மருத்துவர்களுக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680226

                                                                              -----


(Release ID: 1680297)