வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியப் பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக விளங்க வேண்டும்: திரு பியுஷ் கோயல்

Posted On: 12 DEC 2020 2:48PM by PIB Chennai

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் 93-வது வருடாந்திர பொதுக்குழுவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் இன்று உரையாற்றினார்.

தரம் மற்றும் உற்பத்தி திறனுடன் இணைந்த உற்பத்தி அதிகரிப்பு இந்தியாவை உண்மையிலேயே போட்டித்திறன் மிக்க நாடாக ஆக்கும் என்று தன்னுடைய உரையில் திரு கோயல் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருட்கள் மிகவும் திறன் வாய்ந்தவை என்பதை உலகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், பல்வேறு துறைகளில் இந்தியா போட்டித்தன்மையுடன் விளங்குவதன் மூலம் தற்சார்பு இந்தியா இலக்கை எட்டலாம் என்று கூறினார்.

          எந்த துறைகளில் எல்லாம் நாம் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறோம், எவற்றில் எல்லாம் நாம் சர்வதேச போட்டியாளர்களாக விளங்கி, உலகளாவிய வர்த்தகத்திற்கு பெரிய அளவில் பங்காற்ற முடியும் என்பதை நாம் கண்டறிவோம் என்று திரு கோயல் கூறினார்.

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், வேளாண் சீர்திருத்த சட்டங்களின் நன்மைகளைக் குறித்து பேசுமாறு தொழில்துறை தலைவர்கள் மற்றும் வல்லுநர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680205

-----



(Release ID: 1680295) Visitor Counter : 127