ரெயில்வே அமைச்சகம்

மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு: சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே

Posted On: 11 DEC 2020 2:54PM by PIB Chennai

இந்திய ரயில்வே, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டத்தை, தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில்  அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில்வே ஊழியர்களின் நலனுக்காக, மற்றொரு தகவல் தொழில்நுட்ப நடவடிக்கையாக,   மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை ரயில்வே வாரிய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர் டாக்டர் பி.பி.நந்தா இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பி.பி.நந்தா கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பம் மூலம், ரயில்வே ஊழியர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் வழங்கும் கனவு நனவாகியுள்ளது. இந்திய ரயில்வேயின் சுகாதார துறையில், மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரும். இந்த புதிய அமைப்பு சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தும், மருத்துவ வசதிகளை வெளிப்படையாகப் பயன்படுத்த உதவும். மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்படும். மருத்துவ ஆவணங்கள், மருத்துவர்கள் குழுவினருக்கு எல்லா நேரமும் கிடைக்கும்.

இவ்வாறு டாக்டர் டாக்டர் பி.பி.நந்தா தெரிவித்தார்.  

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679986

******

(Release ID: 1679986)


(Release ID: 1680004) Visitor Counter : 299