சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

இ-நீதிமன்றங்கள் திட்டம்: நாடு முழுவதும் 2927 நீதிமன்ற வளாகங்கள் அதிவேக பரந்த பகுதி நெட்வொர்க்குடன்(வேன்) இணைப்பு

Posted On: 11 DEC 2020 12:13PM by PIB Chennai

-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2927 நீதிமன்ற வளாகங்கள், அதிவேக பரந்த பகுதி நெட்வொர்க்(வேன்) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2992 நீதிமன்ற வளாகங்களை, ‘வேன்மூலம்  இணைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது 2927 நீதிமன்றங்கள்வேன்மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், 97.86 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள நீதிமன்றங்களையும் இணைக்க, நீதித்துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் அயராது பணியாற்றி வருகின்றன.

-நீதிமன்றங்கள் திட்டம், உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் நெட்வொர்க் திட்டங்களில் ஒன்று. நாடு முழுவதும் உள்ள 2992 நீதிமன்றங்களிலும், டிஜிட்டல் நெட்வொர்க் ஏற்படுத்தும் திட்டத்தை, நீதித்துறையும், உச்சநீதிமன்றக் குழுவும் வகுத்ததுஇந்த டிஜிட்டல் இணைப்பில், கண்ணாடி நார் இழை வயர்கள், ரேடியோ அலைகள், விசாட் என்ற மூன்று முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொண்டது.

பல நீதிமன்றங்கள் தொலைதூரப் பகுதிகளில் உள்ளன. இங்கு வயர் இணைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற இடங்களில், ரேடியோ அலைகள், விசாட் முறை மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில் உள்ள நீதிமன்றங்களை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட கேபிள் மூலம் இணைக்க நீதித்துறை முடிவு செய்தது.

கொவிட்-19 தொற்று சூழலில் ஆன்லைன் விசாரணை மேற்கொள்ளும் நிலைக்கு நீதிமன்றங்கள் உள்ளானதால், இந்த இணைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீதித்துறை, பிஎஸ்என்எல் ஆகியவைகளின் முயற்சியால் தற்போது நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாகியுள்ளன. இந்த முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தேசிய -நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, -நீதிமன்றங்கள்  திட்டம் கடந்த 2007ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறதுஇந்திய நீதித்துறையில் தகவல் தொடர்புத் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய கொள்கை, செயல்திட்டத்தின் அடிப்படையில் -நீதிமன்றங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

14,249 மாவட்ட மற்றும் துணைநிலை நீதிமன்றங்களை, -நீதிமன்றங்களின் முதலாம் கட்ட திட்டத்தின் கீழ் (2007-2015) கணிணிமயமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நீதித்துறை சேவைகளை விரைவாக வழங்குவதுதான் -நீதிமன்றங்கள் திட்டத்தின் நோக்கம். அதற்காகத்தான் நீதித்துறையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டது.

-நீதிமன்றங்கள் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 16,845 நீதிமன்றங்களை ரூ.1,670 கோடி செலவில் கணிணிமயமாக்க,  மத்திய அமைச்சரவை கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679933

•••••••

 (Release ID: 1679933)


(Release ID: 1679973) Visitor Counter : 1143