மத்திய அமைச்சரவை

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி : அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 DEC 2020 3:47PM by PIB Chennai

பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் அகண்ட அலைவரிசை வை-ஃபை வசதிகளை நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக வழங்க முடியும்.

நாட்டில் பொது வை-ஃபை வலைப் பின்னல்களின் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்கப்படுத்தும். இதனால் அகண்ட அலைவரிசை இணைய வசதியின் வீச்சு அதிகமாகி, வருமானமும், வேலைவாய்ப்புகளும் பெருகி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

PM-WANI.PM-WANI என்று அழைக்கப்படும் இந்த பொது வை-ஃபை வலைப் பின்னல்கள், பல்வேறு அமைப்புகளால் செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679342

*******

(Release ID: 1679342)



(Release ID: 1679376) Visitor Counter : 384