சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது, மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் வெறும் 3.89%
Posted On:
09 DEC 2020 11:12AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைந்து வருவது தொடர்கிறது. மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் நான்கு சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது வெறும் 3.89 சதவீதம் என்னும் அளவில் உள்ளது.
நாட்டில் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,78,909 ஆகும். தினசரி தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 3.14 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினமும் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,957 என்னும் அளவில் இது குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. 32,080 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 36,635 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்டுள்ள மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 15 கோடியை நெருங்கி, 14,98,36,767 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. தினமும் 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,22,712 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 2,220 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 19 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாராந்திர தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679268
********
(Release ID: 1679268)
(Release ID: 1679320)
Visitor Counter : 262
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam