நிதி அமைச்சகம்
மத்திய அரசின் கடன் அனுமதிகள் பல்வேறு மக்கள் சார்ந்த சீர்திருத்தங்களுக்கு மாநிலங்களில் வழிவகுத்துள்ளன
Posted On:
09 DEC 2020 10:55AM by PIB Chennai
நிதி வளங்களை ஒன்று திரட்டுவதில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மாநிலங்களின் கரங்களை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது.
2020-21-ஆம் ஆண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 2 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் வாங்குவதற்கான அனுமதி இவற்றுள் ஒன்றாகும்.
இதன் மூலம் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், பொதுமக்களுக்கான சேவைகளை தொய்வின்றி வழங்குவதற்கும் கூடுதல் நிதியை திரட்ட மாநிலங்களுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், நீண்ட காலக் கடன்களை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கும், கூடுதல் கடனில் ஒரு பகுதி மக்களுக்கான சேவைகளை வழங்கும் முக்கிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள துறைகளில் ஒன்று பொது விநியோகத் திட்டமாகும். கூடுதல் கடனுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாநில உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்தில், 0.25 சதவீதம் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்துவதில் இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9 மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. அவை ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, கோவா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்டவை ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679265
*******
(Release ID: 1679265)
(Release ID: 1679296)
Visitor Counter : 293