பிரதமர் அலுவலகம்

ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமான பணியை, டிசம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர்

Posted On: 05 DEC 2020 5:30PM by PIB Chennai

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணியை, 2020 டிசம்பர் 7ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.  ஆக்ராவின் 15வது பட்டாலியன் பிஏசி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம்:

தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கும் பயனளிக்கும்.  வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவு போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இத்திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.

இதற்கு முன்பு, லக்னோ மெட்ரோ ரயில் சேவையை சிசிஎஸ் விமான நிலையம் முதல் முன்ஷிபுலியாவரை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, பிரதமர் தொடங்கி வைத்தபோது, ஆக்ரா ரயில் மெட்ரோ ரயில் திட்டத்தையும்  பிரதமர் தொடங்கி வைத்தார்.

**********************


(Release ID: 1678607) Visitor Counter : 129