அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி: காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 05 DEC 2020 3:05PM by PIB Chennai

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்காக, புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர் - கனிம வளம் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப மையத்தின் (ஐஎம்எம்டி) முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.  இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

உலக பொருளாதாரத்துக்கு தற்சார்பு இந்திய திட்டம் முக்கிய பங்காற்றும் தற்போதைய சூழலில்இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் கருப் பொருளாக ‘‘தற்சார்பு இந்தியா மற்றும் உலக நலன்’’ இருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. 

பல துறைகளில் நடந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இத்துறையில் நமது முயற்சிகளை உலகுக்கு காட்சியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில் கனிம வளங்கள் மற்றும் பொருட்கள் முக்கிய அம்சங்கள். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழு(சிஎஸ்ஐஆர்) குடும்பத்தில் ஐஎம்எம்டி ஒரு பகுதி. கனிமவள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஐஎம்எம்டி தொடர்ந்து முன்னோக்கி சென்று, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு உறுதி செய்கிறது. 

டங்ஸ்டன், லித்தியம், கோபால்ட், மாங்கனீசுபோன்ற அரிய தனிமங்களின் வளங்களை கண்டறிவதிலும் சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டி பணியாற்றுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தை, தொழிற்சாலைகளில் அமல்படுத்துவதிலும் ஐஎம்எம்டி பணியாற்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் :

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678564

**********************(Release ID: 1678578) Visitor Counter : 45