வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வேளாண் துறையில் இணைந்து செயல்பட அபேடா - நபார்டு வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
03 DEC 2020 2:59PM by PIB Chennai
வேளாண் துறையிலும், அது சார்ந்த துறைகளிலும் இணைந்து செயல்பட்டு பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் நோக்கத்துடன், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபேடாவும், தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியான நபார்டும் காணொலி வாயிலாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அபேடா செயலாளர் டாக்டர் சுதான்சு, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு நிலே டி கபூர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, நபார்டு வங்கியின் தலைவர் டாக்டர் ஜி ஆர் சின்தாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஒப்பந்தத்தின் மூலம் இரு அமைப்புகளும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை திறம்பட செயல்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், கேரளா, நாகலாந்து, அசாம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை இறுதி செய்துள்ளன. இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகளும் அபேடாவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678005
*******
(Release ID: 1678005)
(Release ID: 1678036)
Visitor Counter : 208