நிதி அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் நிதிசீர்திருத்தத்துக்கான டிஜிட்டல் தளங்களை ஊக்குவிக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் - ஆசிய வளர்ச்சிவங்கி, இந்தியா கையெழுத்து

Posted On: 02 DEC 2020 4:50PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலத்தில் நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களுக்கு சிறந்த சேவைகளை அளிக்கவும், டிஜிட்டல் தளங்களை மேம்படுத்த 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், மத்திய அரசும் கையெழுத்திட்டன. 

இந்த நிதி மோலண்மை முதலீட்டு திட்டத்தில் மத்திய அரசு சார்பில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் மகபோத்ரா, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய திட்டங்களுக்கான இயக்குனர் திரு டேகியோ கோனிஷி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேற்கு வங்கத்தின் நிதி அமைப்பு மற்றும் தகவல் அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மக்களுக்கான நிதி சேவைகள் மேம்படும் என டாக்டர் மொகபத்ரா தெரிவித்தார். இது நிதி சேமிப்பை ஏற்படுத்தி மாநிலத்தின் நிதி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என  டாக்டர் மொகபத்ரா கூறினார்.

 

இது குறித்து திரு திரு டேகியோ கோனிஷி கூறுகையில், ‘‘அரசின் டிஜிட்டல் தள சேவைகளுக்கு உதவுவதன் மூலம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, வரி செலுத்துதல் மற்றும் வரி வசூலிப்பு போன்றவை முறைப்படுத்தப்படுத்தப்படும்.  ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக கண்காணிக்க முடியும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677688

**********************



(Release ID: 1677758) Visitor Counter : 240