இந்திய போட்டிகள் ஆணையம்
எஸ்பிஎல் நிறுவனத்தை ஈசிஎல் நிறுவனத்துடன் இணைக்க இந்திய சந்தைப்போட்டி ஆணையம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
01 DEC 2020 1:10PM by PIB Chennai
சந்தைப் போட்டிச் சட்டம் 2002, பிரிவு 31(1)- இன் கீழ் ஸ்ரீகாளஹஸ்தி பைப்ஸ் நிறுவனத்தை (எஸ்பிஎல்) எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்துடன் (ஈசிஎல்) இணைக்க இந்திய சந்தைப்போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈசிஎல் நிறுவனம், இரும்பு குழாய்களின் தயாரிப்பு, வழங்கல் மற்றும் அவற்றைப் பொருத்தும் தொழிலில் ஈடுபட்டுவருகிறது.
எலக்ட்ரோஸ்டீல் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்படும் எஸ்பிஎல் நிறுவனமும் இரும்புக் குழாய்களின் தயாரிப்பு மற்றும் வழங்கலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த இணைப்பு குறித்த விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677326
***********
(रिलीज़ आईडी: 1677385)
आगंतुक पटल : 183