பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படை அகாடமியின் தேர்ச்சியடைந்தோர் அணிவகுப்பு கேரளாவில் நடந்தது

Posted On: 28 NOV 2020 5:06PM by PIB Chennai

இந்திய கடற்படை அகாடமியின் இலையுதிர்கால தேர்ச்சியடைந்தோர் அணிவகுப்பு  கேரளாவில் உள்ள எழிமலாவில் இன்று (2020 நவம்பர் 28) நடைபெற்றது

இந்த கண்கவர் நிகழ்ச்சியில், இந்திய கடற்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் இரண்டு இலங்கை கடற்படையினர் உட்பட 164 பேர் பங்கேற்றனர்.

          பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

துணை அட்மிரல் எம் ஹம்பிஹோலி அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி வைத்தார். தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டிய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, கடமை உணர்வோடும், கண்ணியத்தோடும், தீரத்தோடும் பணியாற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கொவிட் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு, பயிற்சி பெற்றவர்களின் பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் பங்கு பெறாமல் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676752

                                                             -----


(Release ID: 1676824) Visitor Counter : 191