பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

டிரைஃபெட் மற்றும் கோவா அரசு இணைந்து கோவா பழங்குடியினர் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தவிருக்கின்றன

Posted On: 27 NOV 2020 5:04PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் டிரைஃபெட் மற்றும் கோவா அரசு ஆகியவை இணைந்து, நவம்பர் 26 அன்று காணொலி மூலம் நடைபெற்ற கூட்டமொன்றில் கோவா பழங்குடியினர் வளர்ச்சி திட்டத்தை இறுதி செய்திருக்கின்றன.

கோவா அரசின் தலைமை செயலாளர் திரு பரிமல் ராய் தலைமை வகித்த இக்கூட்டத்திற்கு பழங்குடியினர் துறை முதன்மை செயலாளர் திரு ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு சுபாஷ் சந்திரா, டிரைஃபெட்  நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவாவுக்கான பழங்குடியினர் வளர்ச்சி திட்டத்தை இறுதி செய்வது, 25 வன் தன் விகாஸ் கேந்திரங்கள், ஒரு பழங்குடியினர் உணவுப் பூங்கா மற்றும் இரண்டு விற்பனையகங்களை வடக்கு மற்றும் தெற்கு கோவாவில் நிறுவுவது ஆகியவை இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

கோவா முதல்வர் திரு பிரமோத் சவந்த் மற்றும் திரு பிரவிர் கிருஷ்ணா ஆகியோருக்கிடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. சந்திப்பின் போது கோவா பழங்குடியினர் திட்டத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்திருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676481

 

*******************


(Release ID: 1676578) Visitor Counter : 133