சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இருசக்கர வாகன தலைக்கவசங்களுக்கான தரநிலைகள் மாற்றியமைப்பு

Posted On: 27 NOV 2020 4:32PM by PIB Chennai

இருசக்கர வாக ஓட்டிகளுக்கான தலைகவசங்களின் தர கட்டுப்பாடு உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நவம்பர் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. 

இந்த தலைகவசங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) கட்டாய சான்றிதழின் கீழ் சேர்க்கப்பட்டு, தரகட்டுப்பாடு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற குழு உத்தரவுப்படி, இந்திய பருவநிலைக்கு ஏற்ப இலகு ரக  தலைகவசத்தை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எய்ம்ஸ் மருத்துவர்கள், பிஸ் அமைப்பின் நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.  விரிவான ஆய்வுக்குப்பின் எடை குறைவான மற்றும் தரமான தலைகவசங்கள் பற்றிய அறிக்கையை பரிந்துரை செய்தது. இந்த அறிக்கையை சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

குழுவின் பரிந்துரைப்படி, எடை குறைவான தலைக் கவசங்களை தயாரிக்க, சில விவரக் குறிப்புகளை மாற்றியமைத்துள்ளது. இதன்படி எடைகுறைவான தலைகவசங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.  இது இந்திய சந்தையில் நல்ல போட்டியை ஏற்படுத்தும் மற்றும் தரமான எடைகுறைவான தலைக்கவசங்கள் தேவைக்கு உதவும்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1 கோடி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தலைகவசங்களின் இந்த தரக்கட்டுப்பாடு உத்தரவு மூலம், இனி பிஸ் சான்றிதழ் அளிக்கப்பட்ட தலைக்கவசங்கள் மட்டும் நாட்டில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் தரமற்ற தலைக்கவசங்கள் விற்பனை தவிர்க்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பும் அதிகரிக்கும்.

*******************(Release ID: 1676567) Visitor Counter : 226