தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள், கடமைகள் குறித்த மின் கையேட்டை வெளியிட்டார் மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்
Posted On:
26 NOV 2020 6:28PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள் குறித்த மின் கையேட்டை இன்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று வெளியிடப்பட்டுள்ள கையேடு ஓர் முக்கிய ஆவணம். இந்த முயற்சியில் ஈடுபட்ட பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு எனது பாராட்டுக்கள்”, என்று தெரிவித்தார். பத்திரிகை தகவல் அலுவலகம் தொகுத்துள்ள பல்வேறு பிரபல மனிதர்களின் படைப்புகள் அடங்கிய இந்த கையேடு, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் குறிப்பேடாக விளங்கும் என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பு, மிகுந்த ஈடுபாட்டுடன் ஒழுங்குமுறையுடன் பின்பற்றப்பட வேண்டிய ஆவணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய திரு ஜவடேகர், இந்த ஈடு இணையற்ற ஆவணத்தின் வாயிலாக ஏராளமான மக்களின் உரிமைகள் மீட்டுத்தரப்பட்டுள்ளதோடு, அனைத்து தரப்பினருக்கும் சமமான நீதி கிடைப்பதையும் இது உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மின் கையேட்டை இங்கே காணலாம்:
https://static.pib.gov.in/WriteReadData/ebooklat/Flip-Book/constfiles/ index.html
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676122
-----
(Release ID: 1676262)
Visitor Counter : 182