கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வர்த்தக கப்பல் வரைவு மசோதா, 2020 : பொதுமக்கள் கருத்துக்காக கப்பல் அமைச்சகம் வெளியீடு
Posted On:
26 NOV 2020 3:55PM by PIB Chennai
பொதுமக்கள் கருத்துக்களை வரவேற்பதற்காக வர்த்தக கப்பல் வரைவு மசோதா, 2020-ஐ மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வர்த்தக கப்பல் சட்டம், 1958 (1958-இன் சட்ட எண் 44) மற்றும் கரையோர கப்பல் சட்டம், 1838 (1838-இன் சட்ட எண் 19) ஆகியவற்றை மாற்றியமைப்பதை, இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற முன்னேறிய நாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளை இந்திய கப்பல் தொழிலிலும் ஊக்குவிப்பதற்காக வர்த்தக கப்பல் வரைவு மசோதா, 2020 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா பங்கு வகிக்கும் அனைத்து சர்வதேச கடல்சார் அமைப்புகளின் விதிமுறைகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. தொழில் செய்வதை எளிமையாக்குதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், கப்பலில் அதிக சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளுதல், இந்தியாவை நம்பத்தகுந்த கடல் வர்த்தக நாடாக ஆக்குதல், இந்திய மாலுமிகளின் நலன் உள்ளிட்டவை இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த மசோதாவை http://shipmin.gov.in/sites/default/files/Draft_MS_Bill_2020.pdf என்ற இணைப்பில் வாசிக்கலாம். பொதுமக்கள் மசோதா தொடர்பான தமது கருத்துக்களை msbill2020[at]gmail[dot]com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.12.2020 ஆம் தேதிக்கு முன்பு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1676050&RegID=3&LID=1
-----
(Release ID: 1676083)
Visitor Counter : 288