சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியா-பின்லாந்து ஒப்பந்தம் பருவநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பு குறித்த நேர்மறை சமிக்ஞையை உலகத்துக்கு அனுப்பும்: திரு பிரகாஷ் ஜவடேகர்
Posted On:
26 NOV 2020 3:07PM by PIB Chennai
சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பின்லாந்தும் இன்று கையெழுத்திட்டன.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், பின்லாந்து சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திருமிகு கிறிஸ்டா மிக்கொனேன் ஆகியோருக்கிடையே காணொலி மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜவடேகர், இந்தியா, பின்லாந்துக்கிடையேயான ஒப்பந்தம், பருவநிலை மாற்றத்திற்கான உண்மையான ஒத்துழைப்பு குறித்த நேர்மறை சமிக்ஞையை உலகத்துக்கு அனுப்பும் என்று கூறினார்.
காற்று மற்றும் தண்ணீர் மாசு, கழிவு மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், குறைந்த அளவு கரியமிலவாயு உமிழ்வுக்கான தீர்வுகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களின் நீடித்த மேலாண்மை, பருவநிலை மாற்றம், கடல் வளங்களின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1676034&RegID=3&LID=1
-----
(Release ID: 1676074)
Visitor Counter : 212