சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசியப் பாதுகாப்பில் சீரான அணுகுமுறையும் தனி நபர் பங்களிப்பும் அவசியம்: ஜெனரல் வி கே சிங்

Posted On: 26 NOV 2020 1:47PM by PIB Chennai

தேசியப் பாதுகாப்பில் சீரான அணுகுமுறை அவசியம் என்றும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பில் ஒவ்வொரு தனிநபரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய பொது நிர்வாக நிறுவனமான ஐஐபிஏ நேற்று ஏற்பாடு செய்திருந்த தேசியப் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு என்பது சீருடைப் பணியாளர்களின் பொறுப்பு மட்டுமே என்று பொதுவாகக் கருதப்படுவதாகவும் எனினும் அதற்குப் பரந்த உட்கருத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

வெளியுறவுப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு என அனைத்தையும் ஒருங்கிணைத்ததே தேசியப் பாதுகாப்பு என்றும், எனவே இதனை தனித்தனியாகப் பிரித்து அடைய முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம், புதுமை மற்றும் திறன் சார்ந்த அணுகுமுறையை உபயோகிக்க வேண்டும் என்று ஜெனரல் வி கே சிங் கேட்டுக்கொண்டார். தற்சார்பு இந்தியா குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676009



(Release ID: 1676044) Visitor Counter : 159