பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கு மண்டல கடற்படை தளபதியுடன், ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு
Posted On:
24 NOV 2020 2:05PM by PIB Chennai
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ ஃபாரெல், மும்பையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரக தலைமை அதிகாரி சாரா ராபர்ட்ஸ் மற்றும் குழுவினர், மேற்கு மண்டல கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமாரை நவம்பர் 23ம் தேதி சந்தித்து பேசினர்.
இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்து வைஸ் அட்மிரல் அஜித் குமாருடன், ஆஸ்திரேலிய தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் தாங்கி போர்க்கப்பலையும், ஆஸ்திரேலிய தூதர் பார்வையிட்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இடையே சமீபத்தில் நடந்த மலபார் கூட்டு பயிற்சி 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மேற்கு மண்டல கடற்படை தளபதியை, ஆஸ்திரேலிய தூதர் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு காமன்வெல்த் நாடுகளின் உறவை, இந்த சந்திப்பு மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
******
(Release ID: 1675298)
Visitor Counter : 143