குடியரசுத் தலைவர் செயலகம்

குரு தேக் பகதூரின் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் செய்தி

Posted On: 23 NOV 2020 5:51PM by PIB Chennai

குரு தேக் பகதூர் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தியாக தின செய்தி வெளியிட்டுள்ளார்.

குரு தேக் பகதூர் அவர்களின் நினைவு தினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சீக்கிய சமூகத்தின் ஒன்பதாவது குருவான திரு தேக் பகதூர் அவர்கள் மக்களின் நம்பிக்கை மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காக தனது இன்னுயிரை நீத்தார். இதனால் சக குடிமக்கள் அவரைஇந்தியாவின் கேடயம்' என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கின்றனர். அவரது தியாகம், மனித நேயத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவை புரிய நம்மைத் தூண்டுகிறது. அவரது போதனைகள் மற்றும் பணிகள் தொடர்ந்து நம்மை பிறரிடம் அன்பு செலுத்தவும் நாட்டுப்பற்றைப் பரப்பவும் உதவும்.

இந்த புனித நாளில் நமது எண்ணங்களிலிருந்து தீவிரவாதம், குறுகிய மனப்பான்மை மற்றும் வெறுப்பை நீக்கி, பிறரின் தன்னலமற்ற சேவையில் பங்கு கொண்டு, மனித மாண்புகளான அன்பு, சகோதரத்துவம் மற்றும் இரக்க குணம் ஆகியவற்றை ஊக்குவிப்போம் என்று உறுதி மேற்கொள்வோம்”.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675108

-----(Release ID: 1675141) Visitor Counter : 148