சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

15 மாநிலங்களில் 27 இ-லோக் அதாலத்: ஜூன் முதல் அக்டோபர் வரை 2.51 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

Posted On: 23 NOV 2020 2:17PM by PIB Chennai

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ நடத்தப்படுகிறது. கொவிட் தொற்று காரணமாக இந்த லோக் அதாலத், காணொலி முறையில் நடத்தப்பட்டது. இது இ-லோக் அதாலத் என அழைக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் 27 இ-லோக் அதலாத் நடத்தப்பட்டது. மொத்தம் 4.83 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் விளைவாக, ரூ.1409 கோடி அளவுக்கு தீர்வு தொகை அளிக்கப்பட்டது.

மேலும், நவம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட இ-லோக் அதாலத்தில் 16,651 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 12,686 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.107.4 கோடி அளவுக்கு தீர்வு தொகை வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675059

                                           *****(Release ID: 1675085) Visitor Counter : 19