தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 19 NOV 2020 5:42PM by PIB Chennai

'குடியரசின் நெறிமுறை பகுதி 3' (The Republican Ethic Volume III) மற்றும் 'ஜனநாயகத்தின் இசை' (Loktantra Ke Swar) ஆகிய இரண்டு புத்தகங்களின் மின் பதிப்புகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், "பல்வேறு தலைப்புகளின் கீழ் ஊக்கமளிக்கும் உரைகளை குடியரசுத் தலைவர் ஆற்றியுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து உரைகளும் நாட்டின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. கொவிட்டை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்படும் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் அதன் எல்லைகளை துணிச்சலுடன் பாதுகாக்கும் நடவடிக்கைகளை பற்றிய உரைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இதை அனைவரும் குறிப்புக் கையேடாக பயன்படுத்திக் கொள்ளலாம்," என்றார்.

இந்தப் புத்தகங்களின் அச்சுப் பிரதிகளை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார். குடியரசுத் தலைவர், தனது மனதின் ஆழத்திலிருந்து ஆற்றிய உரைகள் இந்த புத்தகத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

அனைத்து முக்கிய மின்வணிக தளங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674042

**********************


(रिलीज़ आईडी: 1674113) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Malayalam