வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சவால் : 243 நகரங்களில் திரு ஹர்தீப் சிங் புரி துவக்கி வைத்தார்
Posted On:
19 NOV 2020 3:58PM by PIB Chennai
கழிவுநீர் தொட்டிக்குள் எந்த ஒரு மனிதரும் இறங்கத் தேவையில்லை என்னும் நிலையை உருவாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி இன்று கூறினார்.
பொது சுகாதாரத்துக்கான தவிர்க்க முடியாத தேவை இல்லாத பட்சத்தில், எந்த ஒரு நபரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கத் தேவையில்லை என்பதிலும், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சவாலை 243 நகரங்களில் தொடங்கி வைத்த அமைச்சர் இவ்வாறு கூறினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர்கள், மாநில திட்ட இயக்குநர்கள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
உலக கழிப்பறை தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சவால், கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தப்படுத்துவதை தடுத்து, இயந்திரங்கள் மூலம் அவற்றை தூய்மைப்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும்தான், பிரதமர் திரு நரேந்திர மோடி, தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புறம்) மைய நோக்கமாக வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள சவாலின் முடிவுகள், 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில், நகரங்களில்கள ஆய்வு செய்த பின்னர், அந்த ஆண்டின் சுதந்திர தினத்தின் போது
வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674015
**********************
(Release ID: 1674047)