குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு குறு நடுத்தர தொழில் துறையால் சானிடைசர் பொதிகலன் பற்றாக்குறை இல்லை
प्रविष्टि तिथि:
19 NOV 2020 12:08PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றால் நமது நாட்டில் “ஹாண்ட் சானிடைசர்“ எனப்படும் கைகளில் தடவிக் கொள்ளும் கிருமிநாசினியின் தேவை பெருமளவில் அதிகரித்ததால் அதனை பேக் செய்யும் பாட்டில்கள், பம்ப்புகளின் தேவையும் கூடியது. இதனை ஈடுகட்டுவதற்கு சிறு குறு நடுத்தர தொழில்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளாலும், நடவடிக்கைகளாலும் இன்று சானிடைசரை பேக் செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் தயாரிப்பதில் நமது நாடு தன்னிறைவு பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யும் நிலையையும் எட்டியுள்ளது. பிரதமரின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின் விளைவாக இது சாத்தியப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் துறையின் இந்த முயற்சிகளையும், சாதனைகளையும் அத்துறையின் அமைச்சர் திரு.நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.
- கொவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில், சானிடைசரை பேக் செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் ஆகியவற்றின் தேவை நாளொன்றுக்கு 50 லட்சமாக இருந்தது. ஆனால் நமது நாட்டின் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 5 லட்சமாகத்தான் இருந்தது. இதனால் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக பாட்டில்களின் விலையும், சானிடைசர் விலையும் அதிகரித்தது.
- இந்நிலையில், சானிடைசரை பேக் செய்யும் பம்ப்புகள், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான அச்சுகளை உருவாக்குவதற்காகவும், அதற்கான இயந்திரங்களை வாங்குவதற்காகவும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம், தனது தொழில்நுட்ப மையங்களுக்கு ரூ.26 கோடியை ஒதுக்கியது.
- இந்த தொழில்நுட்ப மையங்கள் இரண்டு விதமான அச்சுகளை உருவாக்கி, உற்பத்தி நிறுவனங்களுக்கு அளித்தன.
- இதனால் இன்று நாளொன்றுக்கு 40 லட்சம் சானிடைசர் பொதி கலன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- 2020, ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.30 ஆக இருந்த சானிடைசர் கலனின் விலை தற்போது ரூ.5.50 ஆக குறைந்துள்ளது. பல இந்திய நிறுவனங்கள் சானிடைசர் கலன்களை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளன.
விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673954
•••••
(Release ID: 1673954)
(रिलीज़ आईडी: 1673978)
आगंतुक पटल : 318