புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் செயல்பாட்டுக்கு வந்தது
प्रविष्टि तिथि:
18 NOV 2020 5:49PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், தனது இணையதளத்தை புதுப்பித்து, செயல்திறன் அதிகரிக்கப்பட்ட இணையதளத்தை இன்று (2020 நவம்பர் 18) பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
mospi.gov.in என்னும் முகவரியில் இந்த இணையதளத்தை அணுகலாம். சமீபத்திய தொழில்நுட்பத்தின் உதவியோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், ஒருங்கிணைந்த டிஜிட்டல் அனுபவத்தை பயனாளிகளுக்கு வழங்கும்.
தேசிய தகவல் மையம் மற்றும் இதர அமைப்புகளின் வழிகாட்டுதல்களோடு புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை சிறப்பான முறையில் எடுத்துரைப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள தகவல்களை முகநூல், டிவிட்டர் மற்றும் லிங்க்ட் இன் போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் பகிர முடியும்.
மேலும், ஆறு மாதங்களுக்கு பழைய இணையதளத்தையும் புதிய இணையதளத்தின் மூலம் பயனர்கள் அணுக முடியும். பழைய இணையதளத்தை mospi.nic.in என்னும் முகவரியின் மூலம் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673767
**********************
(रिलीज़ आईडी: 1673820)
आगंतुक पटल : 184