அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குருதி அழிவு சோகை, தசை நார் தேய்வுக்கு புதிய மரபணு சிகிச்சை

प्रविष्टि तिथि: 18 NOV 2020 2:03PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவி பேராசிரியரான திரு சந்தீப் ஈஸ்வரப்பா, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயந்தி உதவித்தொகைக்கு (ஃபெல்லோஷிப்) தேர்ந்தெடுக்கப்பட்ட 21 நபர்களில் ஒருவராவார்.

தசை நார் தேய்வு, குருதி அழிவு சோகை, இரத்தம் உறையா நிலை போன்ற நோய்களுக்கு புதிய வகையான மரபணு சிகிச்சையை  திரு சந்தீப் ஈஸ்வரப்பா முன்மொழிந்துள்ளார்.

இந்த நோய்களுக்குக் காரணமாக விளங்கும் மரபணு செயல்முறையை இந்தச் சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார். திரு சந்தீப்பும், அவரது குழுவினரும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்வர்ண ஜெயந்தி உதவித்தொகையின் மூலம், இவர்கள் தங்களது ஆராய்ச்சியை விரிவுபடுத்த முடியும். அவர்களது பணி வெற்றியடையும் பட்சத்தில்தசை நார் தேய்வு, குருதி அழிவு சோகை, இரத்தம் உறையா நிலை போன்ற நோய்களுக்கு புதுமையான தீர்வாக அமையும்.

இந்த ஆராய்ச்சி குறித்து மேலும் தெரிந்து கொள்ள, பேராசிரியர் சந்தீப் ஈஸ்வரப்பாவை sandeep[at]iisc[dot]ac[dot]in என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673699

 

**********************

(Release ID: 1673699)


(रिलीज़ आईडी: 1673714) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Telugu