சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

28 கூடுதல் நீதிபதிகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்தார்

Posted On: 17 NOV 2020 5:44PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 217-இன் உட்கூறு (1) தனக்களித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 28 கூடுதல் நீதிபதிகளை அந்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நீதித்துறை இன்று (2020 நவம்பர் 17) வெளியிட்டுள்ளது.

நீதிபதிகள் திரு பிரகாஷ் பாடியா, திரு அலோக் மாத்தூர், திரு பங்கஜ் பாட்டியா, திரு சவுரப் லாவாணியாதிரு விவேக் வர்மா, திரு சஞ்சய் குமார் சிங், திரு பியுஷ் அக்ரவால், திரு அவ்ரப் ஷியாம் ஷாம்சரி, திரு ஜஸ்ப்ரீத் சிங், திரு ராஜீவ் சிங், திருமதி மஞ்சு ராணி சௌஹான், திரு கருனேஷ் சிங் பவார், டாக்டர் யோகேந்திர குமார் ஸ்ரீவஸ்தவா, திரு மனிஷ் மாத்தூர், திரு ரோகித் ரஞ்சன் அகர்வால், திரு ராம் கிருஷ்ண கவுதம், திரு உமேஷ் குமார், திரு பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா, திரு அனில் குமார்-IX, திரு ராஜேந்திர குமார்-IV, திரு முகமது ஃபயிஸ் ஆலம் கான், திரு விகாஸ் குன்வர் ஸ்ரீவஸ்தவ், திரு வீரேந்திர குமார் ஸ்ரீவஸ்தவா, திரு சுரேஷ் குமார் குப்தா, திருமிகு சுஷ்ஸ்ரீ கந்திகோட்டா ஸ்ரீதேவி, திரு நரேந்திர குமார் ஜோகாரி, திரு ராஜ்பீர் சிங் மற்றும் திரு அஜித் சிங் உள்ளிட்ட கூடுதல் நீதிபதிகள், நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பைப் படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673480

 -----


(Release ID: 1673500)