பிரதமர் அலுவலகம்

பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது 15-வது நிதி ஆணையம்

Posted On: 16 NOV 2020 7:10PM by PIB Chennai

15-வது நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 2021- 22 முதல் 2025-26 வரையிலான ஆணையத்தின் அறிக்கையின் நகலை பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் இன்று வழங்கினர்முன்னதாக கடந்த 4-ஆம் தேதி, குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை இந்த ஆணையம் வழங்கியது.

ஆணையத்தின் தலைவர் திரு என் கே சிங், செயலாளர் திரு அரவிந்த் மேத்தா ஆகியோருடன் உறுப்பினர்கள் திரு நாராயண் ஜாபேராசிரியர் அனூப் சிங், டாக்டர் அசோக் லஹிரி மற்றும் டாக்டர் ரமேஷ் சந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

மத்திய நிதி அமைச்சரிடம் இந்த ஆணையம் நாளை அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறது.

அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை வாயிலாக விளக்கக் குறிப்புடன் இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

                                                                                   ------(Release ID: 1673283) Visitor Counter : 187