கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் : புதிய பெயர் பலகை திறப்பு

प्रविष्टि तिथि: 12 NOV 2020 4:57PM by PIB Chennai

புதிதாக பெயர் மாற்றப்பட்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் புதிய பெயர் பலகையை மத்திய அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் என்று பிரதமர் திரு.நரேந்திரமோடி மாற்றினார். கடந்த 8-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ரோ-பாக்ஸ் படகு சேவையின் தொடக்க விழாவின் போது இதற்கான அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.

பிரதமரின் அறிவிப்பை அடுத்து சம்பந்தபட்ட துறையின் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் இந்த அறிவிக்கை கடந்த 10-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து துறையின் அனைத்து அலுவலகங்களிலும் பெயர் மாற்றம் அமலுக்கு வந்தது. இரண்டு வேலை நாட்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டனஇந்த நிலையில் புதிதாக எழுதப்பட்ட அமைச்சகத்தின், உலோகத்தால் ஆன பெயர் பலகையை  மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு. திரு.மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தியின் ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672290

**********************


(रिलीज़ आईडी: 1672364) आगंतुक पटल : 339
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu