புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2019-20 நிதி ஆண்டில் 17.32 சதவீத வளர்ச்சி
प्रविष्टि तिथि:
12 NOV 2020 12:30PM by PIB Chennai
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் 33-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் புது டில்லியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், கடந்த 2019-20 நிதி ஆண்டில் இந்த முகமை ரூபாய் 2372.38 கோடியை மொத்த வருவாயாக ஈட்டி, 17.32 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ரூபாய் 12,696 கோடி கடன்களுக்கு ஒப்புதல் வழங்கி, ரூபாய் 8785 கோடியை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் 2019-20 நிதி ஆண்டில் 5673 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இது கடந்த நிதியாண்டில் 3266 மெகாவாட் திறனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672209
**********************
(रिलीज़ आईडी: 1672262)
आगंतुक पटल : 199