ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஹைதராபாத், தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14-வது நிறுவன தினம்

Posted On: 10 NOV 2020 6:21PM by PIB Chennai

ஹைதராபாத்தில் உள்ள தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தனது 14-வது நிறுவன தினத்தை இன்று சிறந்த முறையில் கொண்டாடியது.  நிதி ஆயோக் உறுப்பினரும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநரான திரு வி கே சரஸ்வத் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

            உயிரி தொழில்நுட்பத்துறையின் செயலாளரும் உயிரி தொழில்நுட்பத் தொழில்களுக்கான ஆராய்ச்சி உதவி மையத்தின் தலைவருமான டாக்டர் ரேணு சுவரூப் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு காணொலி மூலம் உரையாற்றினார்.

விருந்தினர்களை வரவேற்ற தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதரபாத்தின் இயக்குநர் டாக்டர் சசி பாலா சிங், நிறுவனத்தின் பதிமூன்று ஆண்டு காலப் பயணத்தையும், அதன் சாதனைகளையும் பட்டியலிட்டார்.

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 'மருந்துகள்' பிரிவில் ஐந்தாம் இடத்தை தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதரபாத் பிடித்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் மருந்துகள் கல்வியில் சர்வதேச அளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக டாக்டர் சசி பாலா சிங் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671751

------ 



(Release ID: 1671770) Visitor Counter : 132