அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இன்ஸ்பயர் கல்வி உதவித் தொகை விவகாரம் :அறிவியல் தொழில்நுட்பத் துறை விளக்கம்
Posted On:
10 NOV 2020 2:34PM by PIB Chennai
புதுதில்லி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி மாணவியான திருமிகு ஜி ஐஸ்வர்யா ரெட்டியின் மறைவிற்கு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
`இன்ஸ்பயர்’ எனப்படும் அறிவியல் சார்ந்த புதிய ஆராய்ச்சிகளுக்கான திட்டத்தின் கீழ் உயர்படிப்புக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்த அவர், மிகவும் அறிவான, திறமையான மாணவி. இதற்காகத்தான் அவருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, தகுதி பெற்ற 9,762 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த கடிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு தகவல்களையும், மதிப்பெண் சான்றிதழையும், கல்லூரி அளிக்கும் நன்னடத்தைச் சான்றிதழையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதனடிப்படையில் ஆண்டு முழுமைக்கும் அவர்களுக்கு உதவித்தொகை முறையாக வழங்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக இந்த ஆவணங்கள் திருமிகு ஐஸ்வர்யாவிடமிருந்து கிடைக்கப் பெறவில்லை.
தகுதி பெற்ற மாணவர்கள் இந்த நடைமுறைகளை குறுகிய காலத்தில் செய்து முடிக்குமாறும், இதன் மூலம் அவர்களுக்கான உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கி உரிய நேரத்திற்குள் செயல்படுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671689
-----
(Release ID: 1671713)
Visitor Counter : 296