அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

30 மீட்டர் தொலைநோக்கி திட்டம்: நோபல் பரிசு பெற்றவருடன் இந்திய வானியலாளர்கள் கைகோர்ப்பு

Posted On: 10 NOV 2020 2:22PM by PIB Chennai

ஹவாயில் உள்ள மௌனகேவில் நிறுவப்பட்டு வரும் முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தின் பின்புல உபகரணங்கள் மற்றும் சாத்தியமுள்ள அறிவியல் வாய்ப்புகளுக்காக பேராசிரியர் ஆன்ட்ரியா கெஸ் இந்திய வானியலாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். பிரபஞ்சத்தையும், அதன் ரகசியங்களையும் புரிந்து கொள்வதில் இந்தத் திட்டம் பேருதவி புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் ஆன்ட்ரியா கெஸ் 2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்.

நமது பால்வெளிக்கு நடுவில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை பேராசிரியர் ரோஜர் பென்ரோஸ், பேராசிரியர் ரெய்ன்ஹார்டு ஜென்ஸலுடன் பேராசிரியர் ஆன்ட்ரியா கெஸ் பகிர்ந்து கொண்டார்.

மேலும், அடுத்த தலைமுறை விண்வெளி ஆய்வகமான முப்பது மீட்டர் தொலைநோக்கித் திட்டத்துக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் அறிவியல் திட்டங்களிலும் பேராசிரியர் கெஸ் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்.

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அன்னப்பூரணி சுப்பிரமணியம், ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் சஷி பூஷன் பாண்டே உள்ளிட்டோருடன் முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்துக்காக பேராசிரியர் கெஸ் இணைந்து பணியாற்றியுள்ளார்

முப்பது மீட்டர் தொலைநோக்கித் திட்டம் என்பது கால்டெக், கலிபோர்னியா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியா (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அணுசக்தி துறைத் துறை வாயிலாக) ஆகியவற்றுக்கிடையேயான சர்வதேசக் கூட்டுத் திட்டமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671685

                                                                          ----


(Release ID: 1671706) Visitor Counter : 361