திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க புதிய திறன் பயிற்சிகள்

Posted On: 06 NOV 2020 4:38PM by PIB Chennai

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் மாறிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களில்
புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகளை மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளும் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் என்று இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சித் தலைமை இயக்குநரகம் உறுதி அளித்துள்ளது. விவசாயம், மென்பொருள், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், சமூக ஊடகம் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் பதிமூன்று புதிய பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் ஆறு மாதங்களிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரையில் வழங்கப்படும்.

இது தொடர்பாக பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு எதிர்காலத் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை தற்போதைய பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670646
 


(Release ID: 1670943) Visitor Counter : 134