சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
1035 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் முகாமைத் மத்திய அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்
Posted On:
05 NOV 2020 5:38PM by PIB Chennai
வட மும்பையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்கள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்கும் முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வட மும்பையின் காண்டிவலியில் (மேற்கு) உள்ள பொயின்சூர் ஜிம்கானா என்னும் இடத்தில் இந்த முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கெலாட், கடந்த ஆறு வருடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, இதுபோன்று 9265 முகாம்கள் நடத்தி, அதன் வாயிலாக சுமார் 16.70 லட்சம் நபர்கள் பயன் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். கொவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு தமது அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இந்த முகாம் நடைபெறுவதாக அவர் கூறினார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் வட மும்பையைச் சேர்ந்த 1035 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ரூபாய் 87.96 லட்சம் மதிப்பிலான 1745 உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670374
-----
(Release ID: 1670482)
Visitor Counter : 173