பிரதமர் அலுவலகம்

நவம்பர் ஏழாம் தேதி நடைபெறும் தில்லி ஐஐடியின் ஐம்பத்தோறாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

Posted On: 05 NOV 2020 7:48PM by PIB Chennai

வரும் நவம்பர் ஏழாம் தேதி, சனிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஐம்பத்தோறாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம்  தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் தோக்ரா அரங்கில் குறைந்த அளவிலான மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், பட்டம் பெறும் அனைத்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள் உள்ளிட்டோர்  மெய்நிகர் வாயிலாகக் கலந்து கொள்வார்கள். பி எச்டி, எம் டெக், வடிவமைத்தல் படிப்பில் முதுநிலைப் பட்டம், எம்பிஏ மற்றும் பி டெக் மாணவர்கள் உட்பட 2000 மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பட்டங்கள் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இயக்குநரின் தங்கப் பதக்கம், டாக்டர் சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம், சிறந்த பத்து தங்கப் பதக்கங்கள் மற்றும் நிறுவனத்தின் வெள்ளிப் பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

-----



(Release ID: 1670463) Visitor Counter : 140