மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பெண்களின் 6 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொவிட்-19 ஸ்ரீ சக்தி சவால் விருதை வென்றுள்ளன
प्रविष्टि तिथि:
03 NOV 2020 6:25PM by PIB Chennai
ஐ.நா பெண்கள் அமைப்பு, இந்திய அரசு(MyGov) இணைந்து நடத்திய கொவிட்-19 ஸ்ரீ சக்தி சவால் விருது, பெண்கள் நடத்தும் ஆறு ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
பெரும் அளவிலான பெண்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் அல்லது கொவிட்-19-க்கு எதிரான போரில் உதவுவதற்கான புதுமையான தீர்வுகளுடன் செயல்படும் பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த போட்டி கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசின் MyGov என்ற புதுமையான தளத்தில் இந்த தனித்தன்மை வாய்ந்த சவால் தொடங்கப்பட்டது. பெரும் அளவிலான பெண்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதுமையான தீர்வுகளுடன் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கருத்தியல் நிலை மற்றும் கருத்து ஆதாரம் நிலை ஆகிய இரண்டு கட்டங்களாக இந்த சவால் அமல்படுத்தப்பட்டது. இந்த சவாலுக்கு நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பு காரணமாக 1265 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை முழுமையாகப் பரிசோதனை செய்த பின்னர், 25 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நடுவர்களிடம் தங்கள் கருத்துகளை எடுத்து வைக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்மொழிந்த தீர்வுகள் புதுமையானதாக, உபயோகத்தன்மை வாய்ந்ததாக, ஏற்றதாக இருக்கிறதா என்றும், அவர்கள் முன்வைத்த கருத்து சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறதா என்றும் நடுவர்கள் மதிப்பீடு செய்தனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்துக்கு 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவர்களின் யோசனைகளை மேலும் மேம்படுத்த உதவியாக தலா ரூ.75 ஆயிரம் பரிசு அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களது தீர்வுகளை மேலும் மேம்படுத்தினர். இந்த 11 நிறுவனங்களும் நடுவர்கள் முன்பு 2020 அக்டோபர் 27-ம் தேதி இறுதியான முன்மொழிவுகளை அளித்தனர். அனைத்து தீர்வுகளும் மிகவும் சிறந்தவையாக இருந்ததால் எதனை தேர்வு செய்வது என்று நடுவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தும் பெண்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதிக திறனுடன் கூடிய ஸ்டார்ட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மேலும் 3 நிறுவனங்களுக்கு, வாக்குறுதி தீர்வுகள் என்ற தலைப்பில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் பரிசுடன் வெற்றி பெற்றவர்கள்
1.டாக்டர் பி.காயத்ரி ஹெலா, பெங்களூருவில் உள்ள ரீசதா லைஃப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
2. ரோமிதா கோஷ், கேன்சர் நோயில் இருந்து மீண்டவர், ஐஹீல் ஹெல்த் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர், சிம்லா.
3. டாக்டர் அஞ்சனா ராம்குமார், டாக்டர் அனுஷ்கா அசோகன், தன்மந்த்ரா இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், கேரளா
ரூ. 2 லட்சம் பரிசு பெற்றவர்வகள்:
1.வசந்தி பழனிவேல், செரஜன் பயோ தெரபியூடிக்ஸ் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு
2. சிவி கபில், எம்பதி டிசைன் லேப்ஸ், பெங்களூரு
3. ஜெயா பிரஸ்கார், அங்கிதா பிரஸ்கார் ஸ்டீரிம் மைன்ட்ஸ்
மேலும் தகவல்களுக்கு கீழ் குறிப்பிட்ட ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1669816
******
(Release ID: 1669816)
(रिलीज़ आईडी: 1669972)
आगंतुक पटल : 257